• Sep 08 2024

அதிரடியாக வந்த Dr.அர்ச்சுனா - சாவகச்சேரி வைத்தியசாலை முன் திரண்ட மக்கள்! ஒருவர் கைது!

Chithra / Jul 15th 2024, 10:57 am
image

Advertisement

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக குழப்பத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் நபரொருவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகராக இருந்த இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் இன்று வருகைதந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக அண்மையில் பொதுமக்கள் கூடி பெருமெடுப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் இன்று பொதுமக்கள் கூடலாம் என்ற நிலையில் முன்னெச்சரிக்கையாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரை வரவேற்கும் முகமாகவும் அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர். 

இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு மக்களை விரட்டியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் வைத்தியசாலைக்குள் அதிரடியாகச்சென்ற வைத்தியர் அர்ச்சுனா தனது அலுவலகத்துக்குள் சென்று பதில் அத்தியட்சகர் ரஜீவுடன் நீண்ட நேர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். 


அதிரடியாக வந்த Dr.அர்ச்சுனா - சாவகச்சேரி வைத்தியசாலை முன் திரண்ட மக்கள் ஒருவர் கைது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக குழப்பத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் நபரொருவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகராக இருந்த இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் இன்று வருகைதந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக அண்மையில் பொதுமக்கள் கூடி பெருமெடுப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் இன்று பொதுமக்கள் கூடலாம் என்ற நிலையில் முன்னெச்சரிக்கையாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அவரை வரவேற்கும் முகமாகவும் அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர். இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு மக்களை விரட்டியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேநேரம் வைத்தியசாலைக்குள் அதிரடியாகச்சென்ற வைத்தியர் அர்ச்சுனா தனது அலுவலகத்துக்குள் சென்று பதில் அத்தியட்சகர் ரஜீவுடன் நீண்ட நேர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement