• Jul 31 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய ரத்து சட்டமூல வரைவு அமைச்சரவைக்கு!

Chithra / Jul 30th 2025, 12:46 pm
image

 

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சட்டவரைஞர்களால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூல வரைவு பரிசீலனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய ரத்து சட்டமூல வரைவு அமைச்சரவைக்கு  நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது.சட்டவரைஞர்களால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூல வரைவு பரிசீலனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.தற்போதைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement