• Jun 20 2026

கடல் கீழ் குழாய் வழியூடாக நயினாதீவுக்கு குடிநீர் விநியோகம் - கூட்டத்தில் தீர்மானம்!

Chithra / Jun 19th 2026, 4:07 pm
image


கடல் கீழ் குழாய் வழியூடக நயினாதீவுக்கான குடி நீரை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதற்கு யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தொடரும் குடிநீர் நெருக்கடிக்கான தீர்வுக்காக நீண்டகாலமாக முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட நிலையில் இன்று குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.


இதே நேரம் 2026 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் அடிப்படையில் நயினாதீவில் மொத்த சனத்தொகை 2,612 ஆக இருக்கின்றது.


ஆனாலும் வரும் 2050 ஆம் ஆண்டில் மொத்த சனத்தொகையாக 2,787 ஆக உயர்வடையும் என எதிர்வு கூறப்படுகின்றது. அதேநேரம் ஏறக்குறைய 929 குடும்பங்கள் வேலணை பிரதேசத்தின் இந்த தீவில் வசித்து வருகின்றனர்.


இதனடிப்படையில் நாளொன்றுக்கு நுகரப்படும் மொத்த நீர் ஏறக்குறைய 346m' என எதிர்பார்க்கப்படுகின்றது.


தற்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நாள் ஒன்றுக்கு 150m' நீர் மட்டுமே வழங்குகின்றது.இதே நேரம் குறித்த தீவுக்கு நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 196m' நீர் பற்றாக்குறையாக இருக்கின்றது.


குறித்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக நாள் ஒன்றுக்கு  200 (ஒரு நாளைக்கு ஏறக்குறைய 1 வீதம் 2 இணைப்புக்கள்) உற்பத்தித்திறன் கொண்ட ஒரு புதிய கடல்நீர் ROP (SWRO) திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.


இத் திட்டம் 2030 ஆம் ஆண்டு நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதற்கான மொத்தச் செலவு ரூபா 397.78 மில்லியன் தேவையாக உள்ளது.


இத் திட்டம் நிறைவடைந்ததும் ஒருங்கிணைந்த நீர் விதியாகத்திறன் நாள் ஒன்றுக்கு  சுமார் 150m' 

ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


அத்துடன் இது கணிக்கப்பட்ட தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.அத்துடன் முன்மொழியப்பட்ட இத்திட்டம் அண்ணளலாக 524 புதிய நீர் விதியாக இணைப்புக்களை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் கீழ் குழாய் வழியூடாக நயினாதீவுக்கு குடிநீர் விநியோகம் - கூட்டத்தில் தீர்மானம் கடல் கீழ் குழாய் வழியூடக நயினாதீவுக்கான குடி நீரை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதற்கு யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.தொடரும் குடிநீர் நெருக்கடிக்கான தீர்வுக்காக நீண்டகாலமாக முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட நிலையில் இன்று குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.இதே நேரம் 2026 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் அடிப்படையில் நயினாதீவில் மொத்த சனத்தொகை 2,612 ஆக இருக்கின்றது.ஆனாலும் வரும் 2050 ஆம் ஆண்டில் மொத்த சனத்தொகையாக 2,787 ஆக உயர்வடையும் என எதிர்வு கூறப்படுகின்றது. அதேநேரம் ஏறக்குறைய 929 குடும்பங்கள் வேலணை பிரதேசத்தின் இந்த தீவில் வசித்து வருகின்றனர்.இதனடிப்படையில் நாளொன்றுக்கு நுகரப்படும் மொத்த நீர் ஏறக்குறைய 346m' என எதிர்பார்க்கப்படுகின்றது.தற்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நாள் ஒன்றுக்கு 150m' நீர் மட்டுமே வழங்குகின்றது.இதே நேரம் குறித்த தீவுக்கு நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 196m' நீர் பற்றாக்குறையாக இருக்கின்றது.குறித்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக நாள் ஒன்றுக்கு  200 (ஒரு நாளைக்கு ஏறக்குறைய 1 வீதம் 2 இணைப்புக்கள்) உற்பத்தித்திறன் கொண்ட ஒரு புதிய கடல்நீர் ROP (SWRO) திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.இத் திட்டம் 2030 ஆம் ஆண்டு நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதற்கான மொத்தச் செலவு ரூபா 397.78 மில்லியன் தேவையாக உள்ளது.இத் திட்டம் நிறைவடைந்ததும் ஒருங்கிணைந்த நீர் விதியாகத்திறன் நாள் ஒன்றுக்கு  சுமார் 150m' ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அத்துடன் இது கணிக்கப்பட்ட தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.அத்துடன் முன்மொழியப்பட்ட இத்திட்டம் அண்ணளலாக 524 புதிய நீர் விதியாக இணைப்புக்களை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement