• Aug 02 2025

வேகமாக சென்ற பேருந்தில் சடின் பிரேக் போட்ட சாரதி; தவறி விழுந்த ஒரு வயது குழந்தை பதைபதைக்கும் காணொளி!

Bus
shanuja / Aug 1st 2025, 5:54 pm
image

வேகமாகச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் சாரதி சடினாக பிரேக் அழுத்தியதில் ஒரு வயது குழந்தை ஒன்று பேருந்திலிருந்து தவறி விழுந்துள்ள காட்சி பதறவைத்துள்ளது. 


இந்தச் சம்பவம் விருதுநகர் மாவட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முத்துலிங்கபுரத்தைச் சேர்ந்த மதன் குமார்  என்பவர், தனது சகோதரியின் இரண்டரை வயது மற்றும் ஒரு வயது கைக்குழந்தையை அழைத்துக் கொண்டு மதுரையிலிருந்து தனியார் பேருந்து மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று கொண்டிருந்தார். 


பேருந்தின் முன்பக்க படிக்கட்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த மதன்குமார் மடியில் இரண்டரை வயது குழந்தையும், சகோதரியின் மடியில் ஒரு வயது குழந்தையும் அமர்ந்திருந்தது.


பேருந்து மீனாட்சிபுரம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சாரதி  பிரேக்கை அழுத்தியுள்ளார். 


அப்போது நிலை தடுமாறிய மதன்குமார் இரண்டரை வயது குழந்தையுடன் பேருந்துக்குள் விழுந்தார். அதே நேரத்தில் அவரது சகோதரியின் கையில் இருந்த ஒரு வயது குழந்தை கையில் இருந்து தவறி பேருந்துக்கு வெளியே விழுந்தது. 


இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் சாலையில் விழுந்த குழந்தையை உடனடியாக மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.


ஆனால் மதன் குமார் தலையில் இரத்தக்காயம் ஏற்பட்டது. மதன்குமார் மற்றும் குழந்தை தவறி விழும் பதைபதைக்கும் காட்சி பேருந்தில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேகமாக சென்ற பேருந்தில் சடின் பிரேக் போட்ட சாரதி; தவறி விழுந்த ஒரு வயது குழந்தை பதைபதைக்கும் காணொளி வேகமாகச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் சாரதி சடினாக பிரேக் அழுத்தியதில் ஒரு வயது குழந்தை ஒன்று பேருந்திலிருந்து தவறி விழுந்துள்ள காட்சி பதறவைத்துள்ளது. இந்தச் சம்பவம் விருதுநகர் மாவட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முத்துலிங்கபுரத்தைச் சேர்ந்த மதன் குமார்  என்பவர், தனது சகோதரியின் இரண்டரை வயது மற்றும் ஒரு வயது கைக்குழந்தையை அழைத்துக் கொண்டு மதுரையிலிருந்து தனியார் பேருந்து மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று கொண்டிருந்தார். பேருந்தின் முன்பக்க படிக்கட்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த மதன்குமார் மடியில் இரண்டரை வயது குழந்தையும், சகோதரியின் மடியில் ஒரு வயது குழந்தையும் அமர்ந்திருந்தது.பேருந்து மீனாட்சிபுரம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சாரதி  பிரேக்கை அழுத்தியுள்ளார். அப்போது நிலை தடுமாறிய மதன்குமார் இரண்டரை வயது குழந்தையுடன் பேருந்துக்குள் விழுந்தார். அதே நேரத்தில் அவரது சகோதரியின் கையில் இருந்த ஒரு வயது குழந்தை கையில் இருந்து தவறி பேருந்துக்கு வெளியே விழுந்தது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் சாலையில் விழுந்த குழந்தையை உடனடியாக மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.ஆனால் மதன் குமார் தலையில் இரத்தக்காயம் ஏற்பட்டது. மதன்குமார் மற்றும் குழந்தை தவறி விழும் பதைபதைக்கும் காட்சி பேருந்தில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement