• Aug 02 2025

அரச உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ - நாமல் அறிவிப்பு

Chithra / Aug 2nd 2025, 8:32 am
image

 

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் ஜனாதிபதி தனது எதிர்காலம் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும். 

இந்த நாட்டில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இன்றும் பல்வேறு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.

ஜனாதிபதி மாலைத்தீவுக்கு அரச பயணத்துக்காக சென்றார். நான் எனது தனிப்பட்ட தேவைக்காக சென்றேன். இருவரும் ஒரே விமானத்தில் தான் சென்றோம். இதுவொன்றும் பெரிய விடயமல்ல, 

இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து இராச்சியத்தை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுகிறது. அரச அதிகாரிகள் சுயாதீனமான முறையில் செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.

அரச உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ - நாமல் அறிவிப்பு  முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் ஜனாதிபதி தனது எதிர்காலம் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும். இந்த நாட்டில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இன்றும் பல்வேறு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.ஜனாதிபதி மாலைத்தீவுக்கு அரச பயணத்துக்காக சென்றார். நான் எனது தனிப்பட்ட தேவைக்காக சென்றேன். இருவரும் ஒரே விமானத்தில் தான் சென்றோம். இதுவொன்றும் பெரிய விடயமல்ல, இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து இராச்சியத்தை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுகிறது. அரச அதிகாரிகள் சுயாதீனமான முறையில் செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement