மட்டக்களப்பு நாசிவன்தீவு கடலில் நீராடிய 7 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவத
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள காவத்துமுனை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் உறவினர்கள் உள்ளிட்டோர் நாசிவன் தீவு கடற்கரைபகுதிக்கு சென்று கடலில் நீராடிக் கொண்டிருந்தனர்
இதன் போது 7 வயதுடைய ஆண் மற்றும் பெண் ஆகிய இரு சிறுவர்களும் கடல் நீரில் மூழ்கியதையடுத்து நீராடிக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்றி மட்டு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்
குறித்த பெற்றோர் குழந்தைகள் மீது கவனம் செலுத்தாமையினால் இந்து அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் குழந்தைகள் காப்பாற்றப்பட்டதையடுத்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கிய சிறுவர்கள் அதிரடியாக மீட்பு - மட்டக்களப்பில் சம்பவம் மட்டக்களப்பு நாசிவன்தீவு கடலில் நீராடிய 7 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதவாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள காவத்துமுனை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் உறவினர்கள் உள்ளிட்டோர் நாசிவன் தீவு கடற்கரைபகுதிக்கு சென்று கடலில் நீராடிக் கொண்டிருந்தனர்இதன் போது 7 வயதுடைய ஆண் மற்றும் பெண் ஆகிய இரு சிறுவர்களும் கடல் நீரில் மூழ்கியதையடுத்து நீராடிக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்றி மட்டு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்குறித்த பெற்றோர் குழந்தைகள் மீது கவனம் செலுத்தாமையினால் இந்து அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் குழந்தைகள் காப்பாற்றப்பட்டதையடுத்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.