இந்த நாட்டில் மலையகத்தில் வாழுகின்ற ஆண்கள் பிற்பகல் 02 மணிக்குப் பின்பு குடித்து விட்டே இருக்கின்றனர் என மின்சாரத்துறை அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம் பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையகத்தின் பதுளைப் பிரதேசத்தில் மின்சார கட்டணம் செலுத்தாத தந்தை அவர்கள் அவர்களின் வீட்டுக்கான மீன்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணத்தினால் தனது பிள்ளைகளின் கல்விக்காக அருகில் இருந்த வீட்டில் இருந்து மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது.மின்சாரம் தாக்கி இறந்திருக்கின்றார்.
இதனை அவமதிக்கும் விதமாகவே குறித்த மின்சாரத்துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கருத்துக்களை கூறியிருக்கின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய பொருளாதார நிலையில் அந்த தந்தையினால் மின்சாரக் கட்டண நிலுவையினை செலுத்த முடியாது போயுள்ளது. அவர் தனது பிள்ளைகளின் கல்விக்காக அருகில் இருந்த வீட்டில் இருந்து அவர்களின் அனுமதியுடன் மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது மரண மடைந்திருக்கின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மின்சாரத்துறை அரச அதிகாரி ஒருவர் கல்வி கற்க மின்சாரம் இல்லை என்றால் விளக்கில் படிக்கலாம் என்றும் இந்த நாட்டில் மலையகத்தில் வாழுகின்ற ஆண்கள் பி.பகல் 02 மணிக்குப் பின்பு குடித்து விட்டே இருக்கின்றனர். என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை அமைச்சர்கள் கூறியதாக நாங்கள் கூறவில்லை. அரச அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றார். இது கண்டிக்கத்தக்க விடயம். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் தினேஸ்குண வர்த்தன அவர்கள் நீங்களும் மலையகத்தை பிரதிநிதித்துவ படுத்தும் பிரதிநிதி இராதாகிருஸ்ணன் அவர்களும் இந்த விடயத்தினை முன்வைத்ததற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். நாங்கள் அரசாங்கம் என்ற வகையில் தொழிலாலர் காங்கிரசுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறினார்.
மலையகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை -உடனடியாக நடவடிக்கை எடுக்க எதிர்கட்சித் தலைவர் வேண்டுகோள். இந்த நாட்டில் மலையகத்தில் வாழுகின்ற ஆண்கள் பிற்பகல் 02 மணிக்குப் பின்பு குடித்து விட்டே இருக்கின்றனர் என மின்சாரத்துறை அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம் பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மலையகத்தின் பதுளைப் பிரதேசத்தில் மின்சார கட்டணம் செலுத்தாத தந்தை அவர்கள் அவர்களின் வீட்டுக்கான மீன்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணத்தினால் தனது பிள்ளைகளின் கல்விக்காக அருகில் இருந்த வீட்டில் இருந்து மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது.மின்சாரம் தாக்கி இறந்திருக்கின்றார்.இதனை அவமதிக்கும் விதமாகவே குறித்த மின்சாரத்துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கருத்துக்களை கூறியிருக்கின்றார்.அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய பொருளாதார நிலையில் அந்த தந்தையினால் மின்சாரக் கட்டண நிலுவையினை செலுத்த முடியாது போயுள்ளது. அவர் தனது பிள்ளைகளின் கல்விக்காக அருகில் இருந்த வீட்டில் இருந்து அவர்களின் அனுமதியுடன் மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது மரண மடைந்திருக்கின்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மின்சாரத்துறை அரச அதிகாரி ஒருவர் கல்வி கற்க மின்சாரம் இல்லை என்றால் விளக்கில் படிக்கலாம் என்றும் இந்த நாட்டில் மலையகத்தில் வாழுகின்ற ஆண்கள் பி.பகல் 02 மணிக்குப் பின்பு குடித்து விட்டே இருக்கின்றனர். என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை அமைச்சர்கள் கூறியதாக நாங்கள் கூறவில்லை. அரச அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றார். இது கண்டிக்கத்தக்க விடயம். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க என்று குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த பிரதமர் தினேஸ்குண வர்த்தன அவர்கள் நீங்களும் மலையகத்தை பிரதிநிதித்துவ படுத்தும் பிரதிநிதி இராதாகிருஸ்ணன் அவர்களும் இந்த விடயத்தினை முன்வைத்ததற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். நாங்கள் அரசாங்கம் என்ற வகையில் தொழிலாலர் காங்கிரசுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறினார்.