மாத்தறையில் ஹோட்டல் ஒன்றில் சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தின் போது 25 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நேற்று இரவு இடம்பெற்றதாகவும், விருந்தில் கிட்டத்தட்ட 600 பேர் கலந்துகொண்டதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஹோட்டலில் இடம்பெற்ற விருந்து தொடர்பில் மாத்தறை ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கஞ்சா வைத்திருந்த 09 இளைஞர்களும், ஹசிஸ் போதைப்பொருளை வைத்திருந்த 08 பேரும்,
போதை மாத்திரைகளை வைத்திருந்த 08 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளம் ஊடாக போதை விருந்து; ஹோட்டலொன்றில் சிக்கிய 25 இளைஞர்கள் மாத்தறையில் ஹோட்டல் ஒன்றில் சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தின் போது 25 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த கைது நேற்று இரவு இடம்பெற்றதாகவும், விருந்தில் கிட்டத்தட்ட 600 பேர் கலந்துகொண்டதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.ஹோட்டலில் இடம்பெற்ற விருந்து தொடர்பில் மாத்தறை ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கஞ்சா வைத்திருந்த 09 இளைஞர்களும், ஹசிஸ் போதைப்பொருளை வைத்திருந்த 08 பேரும், போதை மாத்திரைகளை வைத்திருந்த 08 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.