• Apr 28 2026

யாழில் போதைப்பொருள் வேட்டை - 48 மணிநேரத்தில் பொலிஸ் வலையில் சிக்கிய 13 பேர்

Chithra / Apr 27th 2026, 8:00 am
image

யாழ். மாநகரப் பகுதியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. 


கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக முன்னெடுக்கப்பட்ட இந்த வேட்டையின் போதே குறித்த 13 சந்தேகநபர்களும் பொலிஸ் வலையில் சிக்கியுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெள்ளை நிறத்திலான ஹெரோயின் பாக்கெட்டுகள், இளைஞர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படவிருந்த வீரியம் மிக்க போதை மாத்திரைகள் பல கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் தற்போது யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 


இவர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் பிரதான நபர்கள் யார்? என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் 

முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், பொலிஸாரின் இந்த தொடர் நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


யாழில் போதைப்பொருள் வேட்டை - 48 மணிநேரத்தில் பொலிஸ் வலையில் சிக்கிய 13 பேர் யாழ். மாநகரப் பகுதியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக முன்னெடுக்கப்பட்ட இந்த வேட்டையின் போதே குறித்த 13 சந்தேகநபர்களும் பொலிஸ் வலையில் சிக்கியுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெள்ளை நிறத்திலான ஹெரோயின் பாக்கெட்டுகள், இளைஞர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படவிருந்த வீரியம் மிக்க போதை மாத்திரைகள் பல கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் தற்போது யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் பிரதான நபர்கள் யார் என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், பொலிஸாரின் இந்த தொடர் நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement