• Jan 19 2026

'துபாய் இஷாரா'வின் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது.!

Aathira / Jan 17th 2026, 11:55 am
image

துபாயில் இருந்து நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான 'துபாய் இஷாரா' என்பவருக்கு சொந்தமான போதைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று (17) காலை கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 5 கிராம் ஹெராயினையும், மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

சந்தேகநபர்கள் கம்பளை, நாவலப்பிட்டி, உலப்பனை, டோலுவ, கெலிஓயா, பேராதனை, வெலிகல்ல போன்ற பிரதேசங்களுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் இந்த ஹெரோயினை விநியோகித்துள்ளனர்.

கம்பளை டோலுவ பகுதியில் இரண்டு பேரையும், கம்பளை மஹர பகுதியில் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கம்பளை, அங்கம்மன மற்றும் துந்தேனிய பகுதிகளில் வசிக்கும் இந்த சந்தேக நபர்களுக்கு கொழும்பில் இருந்து இந்த போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

'துபாய் இஷாரா'வின் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது. துபாயில் இருந்து நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான 'துபாய் இஷாரா' என்பவருக்கு சொந்தமான போதைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று (17) காலை கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து 5 கிராம் ஹெராயினையும், மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.சந்தேகநபர்கள் கம்பளை, நாவலப்பிட்டி, உலப்பனை, டோலுவ, கெலிஓயா, பேராதனை, வெலிகல்ல போன்ற பிரதேசங்களுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் இந்த ஹெரோயினை விநியோகித்துள்ளனர்.கம்பளை டோலுவ பகுதியில் இரண்டு பேரையும், கம்பளை மஹர பகுதியில் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கம்பளை, அங்கம்மன மற்றும் துந்தேனிய பகுதிகளில் வசிக்கும் இந்த சந்தேக நபர்களுக்கு கொழும்பில் இருந்து இந்த போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement