பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவலைத் தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளரும் உதவி காவல்துறை கண்காணிப்பாளருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பாடசாலைகளை குறிவைத்து உணவுப் பொருட்கள் மூலம் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் முயற்சிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களில் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும்.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் விற்பனை; 11 பேர் கைது பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவலைத் தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளரும் உதவி காவல்துறை கண்காணிப்பாளருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் பாடசாலைகளை குறிவைத்து உணவுப் பொருட்கள் மூலம் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் முயற்சிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களில் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும்.சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.