• Apr 24 2025

மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திய வேட்பாளர் கைது

Chithra / Apr 24th 2025, 1:30 pm
image


மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றதாக கூறப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கினிகத்தேனை பொலிஸார் இரவு நேர சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது நுவரெலியா - கினிகத்தேனை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட்டுள்ளனர். 

சோதனையில், முச்சக்கரவண்டியின் சாரதி மது போதையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், முச்சக்கரவண்டியின் சாரதி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் என தெரியவந்துள்ளது.


மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திய வேட்பாளர் கைது மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றதாக கூறப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கினிகத்தேனை பொலிஸார் இரவு நேர சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது நுவரெலியா - கினிகத்தேனை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட்டுள்ளனர். சோதனையில், முச்சக்கரவண்டியின் சாரதி மது போதையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.இதனையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், முச்சக்கரவண்டியின் சாரதி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் என தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement