• Sep 17 2024

நடுவானில் பறிபோன இலங்கைப் பெண்ணின் உயிர் - பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய துபாய் விமானம்

Chithra / Jul 11th 2024, 2:48 pm
image

Advertisement


இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் நடுவானில் உயிரிழந்ததை தொடர்ந்து துபாய் விமானமொன்று அவசர அவசரமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இலங்கையை சேர்ந்த 57 வயதான பலவினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபாயிலிருந்து கொழும்பிற்கு பயணித்துக் கொண்டிருந்த விமானத்திலிருந்த குறித்த பெண் பயணியின் உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து விமானி கராச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

விமானம் தரையிறங்கியதும் உடனடியாக பாகிஸ்தானின் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையை சேர்ந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக விமானத்திற்குள் ஏறியுள்ளனர்.

அவர்கள் சிகிச்சையளித்த போதிலும் இலங்கை பெண் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் விமான நிலையத்தின் மருத்துவ அதிகாரி  குறித்த பெண்ணிற்கு மரண சான்றிதழை வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த விமானம் பெண்ணின் உடலுடன் கொழும்பை நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடுவானில் பறிபோன இலங்கைப் பெண்ணின் உயிர் - பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய துபாய் விமானம் இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் நடுவானில் உயிரிழந்ததை தொடர்ந்து துபாய் விமானமொன்று அவசர அவசரமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.இலங்கையை சேர்ந்த 57 வயதான பலவினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.துபாயிலிருந்து கொழும்பிற்கு பயணித்துக் கொண்டிருந்த விமானத்திலிருந்த குறித்த பெண் பயணியின் உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது.இதனை தொடர்ந்து விமானி கராச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளார்.விமானம் தரையிறங்கியதும் உடனடியாக பாகிஸ்தானின் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையை சேர்ந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக விமானத்திற்குள் ஏறியுள்ளனர்.அவர்கள் சிகிச்சையளித்த போதிலும் இலங்கை பெண் உயிரிழந்துள்ளார்.அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் பின்னர் விமான நிலையத்தின் மருத்துவ அதிகாரி  குறித்த பெண்ணிற்கு மரண சான்றிதழை வழங்கியுள்ளார்.இதனை தொடர்ந்து குறித்த விமானம் பெண்ணின் உடலுடன் கொழும்பை நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement