• Nov 24 2024

கணவனை விவாகரத்து செய்யும் துபாய் இளவரசி - காரணம் இது தான்

Tharun / Jul 17th 2024, 7:06 pm
image

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் இன் மகள் ஷேக்கா மஹ்ரா திருமணம் நடந்து ஒரு வருடத்தின் பின்னர் தனது கணவரை விவாகரத்து  செய்துள்ளார்.

இவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

இதை, கணவன் - மனைவி இருவரும் கொண்டாடினர்.

இந்த நிலையில், ஷேக்கா மஹ்ரா தனது கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாவில் பகிரங்கமாகவே  அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், ”அன்புள்ள கணவர், நீங்கள் மற்றவர்களுடன் உறவில் இருப்பதால், நம் விவாகரத்தை இதன் மூலம் நான் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன்; நான் உங்களை விவாகரத்து செய்கிறேன்; நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருவதுடன், பலரும் இந்தப் பதிவுக்கு தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணவனை விவாகரத்து செய்யும் துபாய் இளவரசி - காரணம் இது தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் இன் மகள் ஷேக்கா மஹ்ரா திருமணம் நடந்து ஒரு வருடத்தின் பின்னர் தனது கணவரை விவாகரத்து  செய்துள்ளார்.இவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.இதை, கணவன் - மனைவி இருவரும் கொண்டாடினர்.இந்த நிலையில், ஷேக்கா மஹ்ரா தனது கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாவில் பகிரங்கமாகவே  அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், ”அன்புள்ள கணவர், நீங்கள் மற்றவர்களுடன் உறவில் இருப்பதால், நம் விவாகரத்தை இதன் மூலம் நான் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன்; நான் உங்களை விவாகரத்து செய்கிறேன்; நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருவதுடன், பலரும் இந்தப் பதிவுக்கு தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இவர்களுக்கு கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement