• Apr 01 2025

இன்று அதிகாலையில் துப்பாக்கிச் சூடு; தனிப்பட்ட தகராறால் ஏற்பட்ட விபரீதம்

Chithra / Mar 31st 2025, 7:42 am
image


அம்பலாந்தோட்டை – கொக்கல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் வீடொன்றிலிருந்த நபரொருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் அம்பலாந்தோட்டை, கொக்கல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், காயமடைந்த நபருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் சிறிது காலமாக இருந்த தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும்,

துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று அதிகாலையில் துப்பாக்கிச் சூடு; தனிப்பட்ட தகராறால் ஏற்பட்ட விபரீதம் அம்பலாந்தோட்டை – கொக்கல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த பகுதியில் வீடொன்றிலிருந்த நபரொருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காயமடைந்தவர் அம்பலாந்தோட்டை, கொக்கல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.முதற்கட்ட விசாரணையில், காயமடைந்த நபருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் சிறிது காலமாக இருந்த தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும்,துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement