ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தெய்யந்தர பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.
இதன் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில்,
“இந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு மீண்டும் ஏப்ரல் 21 தாக்குதல் நினைவுகூரப்படும், ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் அதற்கு பொறுப்புக்கூறக்கூடிய குழுவொன்றை வெளியிடுவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சி செய்து வருகின்றது.
அதை செய்ய வேண்டும் தானே? உங்களுக்குத் தெரியும் முன்னாள் அமைச்சர்கள் மூவர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தலைமறைவாகிவிட்டார். அப்படியே மறைந்தே இருக்கட்டும் பதற்றப்படத் தேவையில்லை.” என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஈஸ்டர் தின தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் ஏப்ரல் 21 முன் அம்பலப்படுத்தப்படுவர் – ஜனாதிபதி ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தெய்யந்தர பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார். இதன் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில்,“இந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு மீண்டும் ஏப்ரல் 21 தாக்குதல் நினைவுகூரப்படும், ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் அதற்கு பொறுப்புக்கூறக்கூடிய குழுவொன்றை வெளியிடுவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சி செய்து வருகின்றது. அதை செய்ய வேண்டும் தானே உங்களுக்குத் தெரியும் முன்னாள் அமைச்சர்கள் மூவர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தலைமறைவாகிவிட்டார். அப்படியே மறைந்தே இருக்கட்டும் பதற்றப்படத் தேவையில்லை.” என ஜனாதிபதி தெரிவித்தார்.