துருக்கியின் மேற்கு மாகாணமான பாலிகேசிரில் இன்று காலை 00:24 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இஸ்தான்புல் மற்றும் இஸ்மீர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 11.04 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பர்சா, இஸ்மிர், யலோவா மற்றும் குடாஹ்யா மாகாணங்களிலும் இது வலுவாக உணரப்பட்டது.
எவ்வாறாயினும், இதுவரை உயிர் சேதம் அல்லது பெரிய சொத்து சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பாலகேசிர் ஆளுநர் இஸ்மாயில் உஸ்தாவ்லு தெரிவித்தார்.
துருக்கியின் பேரழிவு மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் (AFAD) உடனடியாக செயல்பட்டு அப்பகுதியில் கள விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
துருக்கியில் நிலநடுக்கம் துருக்கியின் மேற்கு மாகாணமான பாலிகேசிரில் இன்று காலை 00:24 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இஸ்தான்புல் மற்றும் இஸ்மீர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 11.04 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.பர்சா, இஸ்மிர், யலோவா மற்றும் குடாஹ்யா மாகாணங்களிலும் இது வலுவாக உணரப்பட்டது.எவ்வாறாயினும், இதுவரை உயிர் சேதம் அல்லது பெரிய சொத்து சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பாலகேசிர் ஆளுநர் இஸ்மாயில் உஸ்தாவ்லு தெரிவித்தார்.துருக்கியின் பேரழிவு மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் (AFAD) உடனடியாக செயல்பட்டு அப்பகுதியில் கள விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.