• Oct 01 2024

சீனாவின் முக்கிய பகுதியில் நிலநடுக்கம் பதிவு!SamugamMedia

Sharmi / Mar 15th 2023, 4:01 pm
image

Advertisement

சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங்கில் உள்ள ஹோட்டானில் இன்றுஅதிகாலை 2.32 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கமானது ஹோட்டனில் இருந்து 263 கிலோமீட்டர் தென்-தெற்கு-கிழக்கே தாக்கியுள்ளது. மேலும் பூமிக்கு அடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள தஜிகிஸ்தானில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜின்ஜியாங் பிராந்தியத்தின் மேற்கு பகுதியில் உள்ள கஷ்கர் மற்றும் ஆர்டக்ஸ் ஆகிய பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் முக்கிய பகுதியில் நிலநடுக்கம் பதிவுSamugamMedia சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங்கில் உள்ள ஹோட்டானில் இன்றுஅதிகாலை 2.32 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ஹோட்டனில் இருந்து 263 கிலோமீட்டர் தென்-தெற்கு-கிழக்கே தாக்கியுள்ளது. மேலும் பூமிக்கு அடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள தஜிகிஸ்தானில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜின்ஜியாங் பிராந்தியத்தின் மேற்கு பகுதியில் உள்ள கஷ்கர் மற்றும் ஆர்டக்ஸ் ஆகிய பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement