• Mar 31 2025

மண் சரிவு காரணமாக பாடசாலைக்கு பூட்டு..!

Sharmi / Sep 27th 2024, 2:32 pm
image

நோட்டன் பிரிட்ஜ் விதுலிபுர சிங்கள மகா வித்தியாலயத்தின் அருகில் உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக குறித்த பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. 

இது தொடர்பில் விதுலிபுர மகா வித்தியாலயத்தின் அதிபர் சுகந்த மாலினி குமாரி கருத்து தெரிவிக்கையில்,

நோட்டன் பிரிட்ஜ் விதுலிபுர சிங்கள மகா வித்யாலயத்திற்கு அருகாமையில் உள்ள கற்பாறைகள் அண்மையில் சரிந்து விழுந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள நிலப்பரப்பில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இப்பகுதியில்  இடைக்கிடையே தொடர்ந்து கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் பாடசாலையின் அருகில் உள்ள மலைப்பகுதி தாழ் இறங்கும் அபாயம் காரணமாக அட்டன் கல்வி வலய பணிப்பாளருடன் கலந்துரையாடி இத் தீர்மானத்தை மேற்கொண்டதாக வித்யாலய அதிபர் சுகந்த மாலினி குமாரி தெரிவித்தார்.

மண் சரிவு காரணமாக பாடசாலைக்கு பூட்டு. நோட்டன் பிரிட்ஜ் விதுலிபுர சிங்கள மகா வித்தியாலயத்தின் அருகில் உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக குறித்த பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இது தொடர்பில் விதுலிபுர மகா வித்தியாலயத்தின் அதிபர் சுகந்த மாலினி குமாரி கருத்து தெரிவிக்கையில்,நோட்டன் பிரிட்ஜ் விதுலிபுர சிங்கள மகா வித்யாலயத்திற்கு அருகாமையில் உள்ள கற்பாறைகள் அண்மையில் சரிந்து விழுந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள நிலப்பரப்பில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில்  இடைக்கிடையே தொடர்ந்து கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் பாடசாலையின் அருகில் உள்ள மலைப்பகுதி தாழ் இறங்கும் அபாயம் காரணமாக அட்டன் கல்வி வலய பணிப்பாளருடன் கலந்துரையாடி இத் தீர்மானத்தை மேற்கொண்டதாக வித்யாலய அதிபர் சுகந்த மாலினி குமாரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement