• Sep 20 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் நினைவேந்தல்! samugammedia

Tamil nila / Apr 21st 2023, 8:49 pm
image

Advertisement

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. 

இவ் நினைவேந்தல் இன்று மாலை 5:30 மணியளவில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரின் கோப்பாய் அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது  உயிர்நீத்த உறுவுகளிற்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலியும்  செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து சரவணபவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...

ஈஸ்டர் தாக்குதல் நினைவேந்தல் இன்று பல இடங்களிலும் இடம்பெறுகிறது. இந்த ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார் என்று தெரிந்தும் அதை ஆட்சி செய்பவர்கள் அவர்களை தண்டிக்க வேண்டிய இடத்திற்கு இன்னமும் கொண்டு வரவில்லை.

ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அதனை தட்டிக் கழித்துக் கொண்டு செல்லுகின்றார்கள். இதற்கு பலரும் தங்களுடைய குரல்களை உயர்த்திக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த  துர்ப்பார்க்கிய நிகழ்வினை  அனைத்து உலகமே அறியும். இதன் பின்னணியில் யார் இருந்தவர்கள் என்று தேடுகிற பொழுது இன்று தங்களுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக உண்மையை மறைத்து ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றார்கள். 

இது மிகவும் வெட்கக்கேடான அநாகரிகமான செயல் அவ்வளவுதான். அவர்கள் உயர் பதவிகளில் இருந்தாலும் தங்கள் மனசாட்சிக்கு எதிராக வேலை செய்து கொண்டே இருக்கின்றார்கள். 

கடந்த 2009 ஆம் ஆண்டு  இனப்படுகொலை இடம்பெற்ற இனப்படுகொலையில் யார் தொடர்புபட்டிருப்பது என  எல்லோருக்கும் தெரியும். அதேபோல 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்திற்கும் யார் பிரதான சூத்திரதாரி  என்றும் அனைவருக்கும் தெரியும்.

இந்த இலங்கையில் ஒரு நீதியான தீர்ப்பு இதுவரை  கிடைக்கப் பெறவில்லை. எங்களுடைய இனப்படுகொலைக்கும் நாங்கள் சர்வதேசத்தை நாடியிருந்தோம். சர்வதேசம் எமது மக்களுடைய இந்தப் படுகொலையையும்  விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம் .

அதேபோல தற்பொழுது ஆயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை  அவர்களும் சர்வதேசத்தை தான் நாடியிருக்கின்றார். இதை விசாரித்து ஒரு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று கூறுகிறார். 

ஆனால் பெரும்பான்மை பௌத்த சிங்களவர்கள் இந்த இடத்தில் அவர்கள் ஒரே கோட்டில் நிற்கின்றார்கள். அது  சிறுபான்மை இனமாக இருக்கலாம் அல்லது கிறிஸ்தவர்களாக இருக்கட்டும் அவர்களிடமிருந்து எந்த ஒரு நீதியும் கிடைக்காது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். 

இவர்களிடம் நீதியைத் தேடி நாங்கள் போவதாக இருந்தால் ஒரே குரலில் ஒருமித்த குரலில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சர்வதேசத்தை நாட வேண்டும். சர்வதேசத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பது பற்றி தீவிரமாக சிந்தித்து கொள்ள வேண்டும் . 

பல நாடுகளில் இது நடந்திருக்கிறது. எனவே இந்த படுகொலைக்கு பின்னணியில் இருந்தவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை.  அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய அனைவருமாக பிரார்த்திக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் நினைவேந்தல் samugammedia உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இவ் நினைவேந்தல் இன்று மாலை 5:30 மணியளவில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரின் கோப்பாய் அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.இதன் பொழுது  உயிர்நீத்த உறுவுகளிற்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலியும்  செலுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து சரவணபவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.ஈஸ்டர் தாக்குதல் நினைவேந்தல் இன்று பல இடங்களிலும் இடம்பெறுகிறது. இந்த ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார் என்று தெரிந்தும் அதை ஆட்சி செய்பவர்கள் அவர்களை தண்டிக்க வேண்டிய இடத்திற்கு இன்னமும் கொண்டு வரவில்லை.ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அதனை தட்டிக் கழித்துக் கொண்டு செல்லுகின்றார்கள். இதற்கு பலரும் தங்களுடைய குரல்களை உயர்த்திக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த  துர்ப்பார்க்கிய நிகழ்வினை  அனைத்து உலகமே அறியும். இதன் பின்னணியில் யார் இருந்தவர்கள் என்று தேடுகிற பொழுது இன்று தங்களுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக உண்மையை மறைத்து ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றார்கள். இது மிகவும் வெட்கக்கேடான அநாகரிகமான செயல் அவ்வளவுதான். அவர்கள் உயர் பதவிகளில் இருந்தாலும் தங்கள் மனசாட்சிக்கு எதிராக வேலை செய்து கொண்டே இருக்கின்றார்கள். கடந்த 2009 ஆம் ஆண்டு  இனப்படுகொலை இடம்பெற்ற இனப்படுகொலையில் யார் தொடர்புபட்டிருப்பது என  எல்லோருக்கும் தெரியும். அதேபோல 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்திற்கும் யார் பிரதான சூத்திரதாரி  என்றும் அனைவருக்கும் தெரியும்.இந்த இலங்கையில் ஒரு நீதியான தீர்ப்பு இதுவரை  கிடைக்கப் பெறவில்லை. எங்களுடைய இனப்படுகொலைக்கும் நாங்கள் சர்வதேசத்தை நாடியிருந்தோம். சர்வதேசம் எமது மக்களுடைய இந்தப் படுகொலையையும்  விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம் .அதேபோல தற்பொழுது ஆயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை  அவர்களும் சர்வதேசத்தை தான் நாடியிருக்கின்றார். இதை விசாரித்து ஒரு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் பெரும்பான்மை பௌத்த சிங்களவர்கள் இந்த இடத்தில் அவர்கள் ஒரே கோட்டில் நிற்கின்றார்கள். அது  சிறுபான்மை இனமாக இருக்கலாம் அல்லது கிறிஸ்தவர்களாக இருக்கட்டும் அவர்களிடமிருந்து எந்த ஒரு நீதியும் கிடைக்காது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். இவர்களிடம் நீதியைத் தேடி நாங்கள் போவதாக இருந்தால் ஒரே குரலில் ஒருமித்த குரலில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சர்வதேசத்தை நாட வேண்டும். சர்வதேசத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பது பற்றி தீவிரமாக சிந்தித்து கொள்ள வேண்டும் . பல நாடுகளில் இது நடந்திருக்கிறது. எனவே இந்த படுகொலைக்கு பின்னணியில் இருந்தவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை.  அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய அனைவருமாக பிரார்த்திக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement