• Sep 21 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..! samugammedia

Chithra / Sep 10th 2023, 2:42 pm
image

Advertisement

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் இறுதித் தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஊடகமான செனல் 4 தொலைக்காட்சியின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஆவணப்படத்தின் வெளிப்படுத்தல்களை விசாரணை செய்யாமலிருக்க இயலாது. 

இலங்கையின் சட்டகட்டமைப்புக்குள் முழுமையானதும்  பரந்துப்பட்டதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் விசேட ஜனாதிபதி விசாரணை குழுவை நியமித்து அதனூடாக உண்மை நிலையை அறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் தினைக்களம், சட்டமாதிபர் தினைக்களம் மற்றும் அரச சிவில் நிர்வாக சேவை ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கும் வகையில் இந்த விசாரணை குழு உருவாக்கப்பட உள்ளது. பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் இந்த குழுவை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்  ஆகியோருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல். samugammedia உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் இறுதித் தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பிரித்தானிய ஊடகமான செனல் 4 தொலைக்காட்சியின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஆவணப்படத்தின் வெளிப்படுத்தல்களை விசாரணை செய்யாமலிருக்க இயலாது. இலங்கையின் சட்டகட்டமைப்புக்குள் முழுமையானதும்  பரந்துப்பட்டதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் விசேட ஜனாதிபதி விசாரணை குழுவை நியமித்து அதனூடாக உண்மை நிலையை அறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.பொலிஸ் தினைக்களம், சட்டமாதிபர் தினைக்களம் மற்றும் அரச சிவில் நிர்வாக சேவை ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கும் வகையில் இந்த விசாரணை குழு உருவாக்கப்பட உள்ளது. பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கூடிய விரைவில் இந்த குழுவை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்  ஆகியோருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement