• Nov 23 2024

தொலைபேசி பாவனையின் எதிரொலி...! புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு...!samugammedia

Sharmi / Feb 5th 2024, 1:30 pm
image

நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குழந்தைகள்,  கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகுவதால் ஏற்படும் உடல் சோர்வு புற்றுநோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரிப்பதற்கு  ஒரு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில்,  எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளதாக சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதய நோயினால் இறப்பவர்களை விட புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தொலைபேசி பாவனையின் எதிரொலி. புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு.samugammedia நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இலங்கையில் குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.குழந்தைகள்,  கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகுவதால் ஏற்படும் உடல் சோர்வு புற்றுநோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரிப்பதற்கு  ஒரு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறானதொரு நிலையில்,  எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளதாக சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இதய நோயினால் இறப்பவர்களை விட புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement