• Apr 28 2024

இலங்கையில் மீண்டும் அதிகரித்த முட்டை விலை..!

Chithra / Feb 5th 2024, 1:22 pm
image

Advertisement

 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு முட்டையை மொத்த விலையில் ரூ.60க்கு வாங்குவதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முட்டை விலையை உயர்த்தியதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

குளிர்பதன கிடங்குகளில் முட்டைகளை சேமித்து வைத்திருந்த இடைத்தரகர்கள் குழுவொன்று இவ்வாறு முட்டை விலையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வேகமாக அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்த எதிர்காலத்தில் சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் அதிகரித்த முட்டை விலை.  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.ஒரு முட்டையை மொத்த விலையில் ரூ.60க்கு வாங்குவதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முட்டை விலையை உயர்த்தியதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.குளிர்பதன கிடங்குகளில் முட்டைகளை சேமித்து வைத்திருந்த இடைத்தரகர்கள் குழுவொன்று இவ்வாறு முட்டை விலையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேகமாக அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்த எதிர்காலத்தில் சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement