• Dec 09 2024

இலங்கையில் முட்டை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு..!

Egg
Chithra / Oct 9th 2024, 11:38 am
image

 

அண்மையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அந்த விலையில் முட்டைகளைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 

20 முதல் 30 ரூபா வரை குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

நாட்டின் சில பகுதிகளில் முட்டையின் விலை கிட்டத்தட்ட 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 

உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டை விலை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தநிலையில் தற்போதைய நிலவரத்தால் முட்டையின் விலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முட்டையின் விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் உள்ளதாகவும்,

குறிப்பாக பெரும்பாலான மொத்த வியாபாரிகள் அதிகளவில் முட்டைகளை கொள்வனவு செய்து அதனை விற்பனை செய்தமையினால் சந்தையில் முட்டைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முட்டை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.  அண்மையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அந்த விலையில் முட்டைகளைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 20 முதல் 30 ரூபா வரை குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் சில பகுதிகளில் முட்டையின் விலை கிட்டத்தட்ட 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டை விலை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் தற்போதைய நிலவரத்தால் முட்டையின் விலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் முட்டையின் விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் உள்ளதாகவும்,குறிப்பாக பெரும்பாலான மொத்த வியாபாரிகள் அதிகளவில் முட்டைகளை கொள்வனவு செய்து அதனை விற்பனை செய்தமையினால் சந்தையில் முட்டைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement