• Nov 21 2024

நாடாளுமன்றத் தேர்தலுக்காக 08 நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு

Chithra / Oct 9th 2024, 11:28 am
image

 

நாடாளுமன்ற தேர்தலை கண்காணிப்பதற்காக 08 நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களும் இலங்கைக்கு விஜயம் செய்து பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை அவதானிக்க உள்ளனர்.

மேலும், பொதுத் தேர்தலை கண்காணிக்க ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பார்வையாளர்களும் வர உள்ளனர்.

இதேவேளை  எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர் குறித்த நியமனங்களைக் கையளிக்கும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பிரகடனம் செய்யப்பட்ட தினத்தில் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை உரிய தெரிவத்தாட்சி அலுவலரிடம் பெயர் குறித்த நியமனப்பத்திரங்களுடன் ஒப்படைக்க வேண்டும்.

பெயர் குறித்த நியமனப்பத்திரத்துடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக 08 நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு  நாடாளுமன்ற தேர்தலை கண்காணிப்பதற்காக 08 நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.இதற்கு மேலதிகமாக பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களும் இலங்கைக்கு விஜயம் செய்து பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை அவதானிக்க உள்ளனர்.மேலும், பொதுத் தேர்தலை கண்காணிக்க ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பார்வையாளர்களும் வர உள்ளனர்.இதேவேளை  எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதன்படி, தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர் குறித்த நியமனங்களைக் கையளிக்கும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பிரகடனம் செய்யப்பட்ட தினத்தில் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை உரிய தெரிவத்தாட்சி அலுவலரிடம் பெயர் குறித்த நியமனப்பத்திரங்களுடன் ஒப்படைக்க வேண்டும்.பெயர் குறித்த நியமனப்பத்திரத்துடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement