• Nov 16 2024

மட்டு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் எட்டு நாள் ஆன்மீக யாத்திரை நிறைவு..!

Sharmi / Sep 4th 2024, 10:30 am
image

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு எட்டு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை இன்றையதினம்(04)  காலை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை வந்தடைந்தது.

மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் எல்லையாக இருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கடந்த புதன்கிழமை (28) மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பமாகி இன்றையதினம் காலை  வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை வந்தடைந்தது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகிய ஆன்மீக பாதயாத்திரையானது  எட்டு நாட்களைக் கொண்டதாக அமைந்தது.

குறித்த யாத்திரையில் நந்திக்கொடி ஏந்தியவாறு அரோகரா கோசத்துடன் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஆலயத்தினை வந்தடைந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் வருடா வருடம் ஆன்மீக பாதயாத்திரை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற திருவிழா நாளில் யாத்திரிகர்கள் ஆலயத்தினை வந்தடைந்தனர்.



மட்டு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் எட்டு நாள் ஆன்மீக யாத்திரை நிறைவு. மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு எட்டு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை இன்றையதினம்(04)  காலை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை வந்தடைந்தது.மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் எல்லையாக இருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கடந்த புதன்கிழமை (28) மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பமாகி இன்றையதினம் காலை  வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை வந்தடைந்தது.மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகிய ஆன்மீக பாதயாத்திரையானது  எட்டு நாட்களைக் கொண்டதாக அமைந்தது.குறித்த யாத்திரையில் நந்திக்கொடி ஏந்தியவாறு அரோகரா கோசத்துடன் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஆலயத்தினை வந்தடைந்தனர்.மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் வருடா வருடம் ஆன்மீக பாதயாத்திரை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இம்முறை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற திருவிழா நாளில் யாத்திரிகர்கள் ஆலயத்தினை வந்தடைந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement