• Oct 09 2024

ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் கைது

Chithra / Oct 2nd 2024, 2:10 pm
image

Advertisement

 


ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வயோதிபர் ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கண்டி பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய வயோதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

08 முதல் 14 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளும் பரிசோதனைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் கைது  ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வயோதிபர் ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.கண்டி பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி, பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய வயோதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.08 முதல் 14 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளும் பரிசோதனைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement