• Mar 31 2025

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி; தந்தை பலி! இரு பிள்ளைகள் வைத்தியசாலையில்

Chithra / Oct 2nd 2024, 2:06 pm
image



மாத்தறை, தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (02) காலை இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, முச்சக்கரவண்டியின் சாரதியான தந்தை மதுபோதையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில், முச்சக்கரவண்டியின் சாரதியான தந்தையும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இரண்டு பிள்ளைகளும் காயமடைந்துள்ள நிலையில் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளார்.

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி; தந்தை பலி இரு பிள்ளைகள் வைத்தியசாலையில் மாத்தறை, தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று புதன்கிழமை (02) காலை இடம்பெற்றுள்ளது.சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது, முச்சக்கரவண்டியின் சாரதியான தந்தை மதுபோதையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த விபத்தில், முச்சக்கரவண்டியின் சாரதியான தந்தையும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இரண்டு பிள்ளைகளும் காயமடைந்துள்ள நிலையில் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement