• Oct 11 2024

மொட்டு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நாளை அனுராதபுரத்தில்...! நாமல் போட்ட கண்டிசன்..!

Sharmi / Aug 20th 2024, 5:02 pm
image

Advertisement

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறுவதற்குரிய காலம் நெருங்கிவரும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அந்தவகையில்,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் நாளை (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சிலர் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டாலும் மக்கள் அவ்வாறு செயற்படுவதில்லை எனவும் அடிமட்ட மக்கள் அனைவரும் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளனர்.

நாளையதினம் கடப்பனஹ மைதானத்தில் நடைபெறும் பேரணிக்கு வெளி மாகாணங்களில் இருந்து ஆட்களை அழைத்து வர வேண்டாம் என கட்சி அமைப்பாளர்களிடம் கூறியதாக நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

ஏனைய கட்சிகள் வெளியூர்களில் இருந்து மக்களை பேருந்துகளில் அழைத்து வந்து ஆட்களை காண்பிப்பதாகவும், வெளியூர்களில் இருந்து ஆட்களை வரவழைத்து அவர்களின் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டாம் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை ஆகஸ்ட் 21ஆம் திகதி அனுராதபுரம் கடபஹா கூட்டத்திற்கு வருமாறு நாமல் ராஜபக்ஷ அநுராதபுரம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மொட்டு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நாளை அனுராதபுரத்தில். நாமல் போட்ட கண்டிசன். இலங்கையின் அடுத்த ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறுவதற்குரிய காலம் நெருங்கிவரும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.அந்தவகையில்,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் நாளை (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சிலர் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டாலும் மக்கள் அவ்வாறு செயற்படுவதில்லை எனவும் அடிமட்ட மக்கள் அனைவரும் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளனர்.நாளையதினம் கடப்பனஹ மைதானத்தில் நடைபெறும் பேரணிக்கு வெளி மாகாணங்களில் இருந்து ஆட்களை அழைத்து வர வேண்டாம் என கட்சி அமைப்பாளர்களிடம் கூறியதாக நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.ஏனைய கட்சிகள் வெளியூர்களில் இருந்து மக்களை பேருந்துகளில் அழைத்து வந்து ஆட்களை காண்பிப்பதாகவும், வெளியூர்களில் இருந்து ஆட்களை வரவழைத்து அவர்களின் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டாம் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.இந்நிலையில், நாளை ஆகஸ்ட் 21ஆம் திகதி அனுராதபுரம் கடபஹா கூட்டத்திற்கு வருமாறு நாமல் ராஜபக்ஷ அநுராதபுரம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement