• Oct 29 2025

சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணை!

shanuja / Oct 29th 2025, 2:03 pm
image

சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் ஏற்பட்ட  தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தென்கிழக்கு விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதியில் இன்று (29) புதன்கிழமை  தீ விபத்து ஏற்பட்டிருந்தது.


இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணங்களால் ஏற்பட்டதா என விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்த அம்பாறை  அக்கரைப்பற்று மற்றும் கல்முனை ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்புப் படையினர் வருகை தந்திருந்தனர்.


மேலும் சம்மாந்துறை பொலிஸ்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை அல் உஸ்வா உயிர் காப்பு குழுவினர்,  இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள் ,  தீ விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வந்திருந்தனர்.


குறித்த தீ விபத்தில்  எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுவதுடன்   பல பொருட்கள் தீயில் எரிந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


 சம்பவ  இடத்திற்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா , சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், தென்கிழக்கு பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்,  அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் வருகை தந்திருந்தனர்.

சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணை சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் ஏற்பட்ட  தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தென்கிழக்கு விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதியில் இன்று (29) புதன்கிழமை  தீ விபத்து ஏற்பட்டிருந்தது.இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணங்களால் ஏற்பட்டதா என விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்த அம்பாறை  அக்கரைப்பற்று மற்றும் கல்முனை ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்புப் படையினர் வருகை தந்திருந்தனர்.மேலும் சம்மாந்துறை பொலிஸ்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை அல் உஸ்வா உயிர் காப்பு குழுவினர்,  இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள் ,  தீ விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வந்திருந்தனர்.குறித்த தீ விபத்தில்  எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுவதுடன்   பல பொருட்கள் தீயில் எரிந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ  இடத்திற்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா , சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், தென்கிழக்கு பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்,  அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் வருகை தந்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement