• Oct 29 2025

மாங்குளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

Chithra / Oct 29th 2025, 1:42 pm
image


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 227ஆவது கிலோமீற்றர் பகுதியில் வேன்  ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த வாகனம், அவர்களைக் கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, வாகனத்தில் சாரதி மாத்திரமே இருந்துள்ளார். 

அவர் தெய்வாதீனமாக சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார். 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாங்குளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 227ஆவது கிலோமீற்றர் பகுதியில் வேன்  ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த வாகனம், அவர்களைக் கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, வாகனத்தில் சாரதி மாத்திரமே இருந்துள்ளார். அவர் தெய்வாதீனமாக சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement