• Oct 29 2025

சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்த இலங்கையர்கள் நாடு கடத்தல்

Chithra / Oct 29th 2025, 12:24 pm
image

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாடு சென்றிருந்த 3 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

15 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக படகில் குறித்த 3 பேரும் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சென்னை மண்ணடியில் தங்கி இருந்த இசைவேந்தன், யோகராசா, சுஜீவனை நேற்று தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அவர்கள் மூன்று பேரிடமும் இந்தியாவில் வந்து தங்குவதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது. 

மேலும், அவர்கள் மூன்று பேர் மீதும் இலங்கையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் இலங்கை செல்லும் விமானத்தில் மூன்று பேரும் நாடுகடத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்த இலங்கையர்கள் நாடு கடத்தல் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாடு சென்றிருந்த 3 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 15 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக படகில் குறித்த 3 பேரும் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை மண்ணடியில் தங்கி இருந்த இசைவேந்தன், யோகராசா, சுஜீவனை நேற்று தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மூன்று பேரிடமும் இந்தியாவில் வந்து தங்குவதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் மூன்று பேர் மீதும் இலங்கையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை செல்லும் விமானத்தில் மூன்று பேரும் நாடுகடத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement