• Apr 04 2025

வவுனியாவில் வேட்பாளர்களிற்கு தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல்

Thansita / Apr 3rd 2025, 6:41 pm
image

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வவுனியா மாவட்ட  வேட்பாளர்களிற்கான தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல் தொடர்பான கூட்டம் இன்று இடம்பெற்றிருந்தது 

வவுனியா தேர்தல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நகரசபை கலாச்சார மண்டபத்தில் குறித்த கூட்டமானது இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பி.ஏ.சரத்சந்திர, மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சி.அமல்ராஜ் ஆகியோர் தேர்தல் நடவடிக்கை மற்றும் பிரச்சார நடவடிக்கைகளின் போது வேட்பாளர்கள் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் செயற்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும், தேர்தல் சட்ட திட்டங்கள் தொடர்பாகவும், பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர்.

இதில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்

வவுனியாவில் வேட்பாளர்களிற்கு தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வவுனியா மாவட்ட  வேட்பாளர்களிற்கான தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல் தொடர்பான கூட்டம் இன்று இடம்பெற்றிருந்தது வவுனியா தேர்தல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நகரசபை கலாச்சார மண்டபத்தில் குறித்த கூட்டமானது இடம்பெற்றிருந்தது.வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பி.ஏ.சரத்சந்திர, மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சி.அமல்ராஜ் ஆகியோர் தேர்தல் நடவடிக்கை மற்றும் பிரச்சார நடவடிக்கைகளின் போது வேட்பாளர்கள் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் செயற்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும், தேர்தல் சட்ட திட்டங்கள் தொடர்பாகவும், பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர்.இதில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்

Advertisement

Advertisement

Advertisement