• Apr 04 2025

சட்டவிரோதமான முறையில் மதுபானம் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தை மடக்கிப் பிடித்த நெடுந்தீவு பொலிசார்

Thansita / Apr 3rd 2025, 6:57 pm
image

நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தகத்திற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி மதுபானம் ஏற்றிய உழவு இயந்திரம் இன்றையதினம் (ஏப்ரல்03) பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளது. 

குறிகாட்டுவானில் இதற்கான அனுமதி பெற்ற படகில் நெடுந்தீவுக்கு கொண்டுவரப்பட்ட போதும் நெடுந்தீவு துறைமுகத்தில் இருந்து உரிய விருந்தகத்திற்கு அனுமதி மற்றும் இலக்கத்தகடு இல்லாத உழவு இயந்திரத்தில் மதுபானம் ஏற்றப்பட்டது

இந்நிலையில் பொலிஸாரால் வாகனத்துடன் மதுபானம் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. 

துறைமுகப் பகுதியில் மதுபானம் இறக்கப்பட்ட நிலையில்இ தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக நெடுந்தீவில் நின்ற யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் இதனை நேரடியாக அவதானித்து சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தார்

பின்னர் நிலைமையினை ஆராய்ந்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. 

2025 ஆம் ஆண்டுக்கான மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் இருந்த நிலையில் , அண்மையில் இது தொடர்பாக மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் நெடுந்தீவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது

அதற்கான முடிவு இன்னும் வழங்கப்படாத நிலையில் அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்ட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

அதனடிப்படையிலேயே குறித்த தனியார் விருந்தகத்திற்கான மதுபானம் இன்றையதினம் எடுத்துவரப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.



சட்டவிரோதமான முறையில் மதுபானம் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தை மடக்கிப் பிடித்த நெடுந்தீவு பொலிசார் நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தகத்திற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி மதுபானம் ஏற்றிய உழவு இயந்திரம் இன்றையதினம் (ஏப்ரல்03) பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவானில் இதற்கான அனுமதி பெற்ற படகில் நெடுந்தீவுக்கு கொண்டுவரப்பட்ட போதும் நெடுந்தீவு துறைமுகத்தில் இருந்து உரிய விருந்தகத்திற்கு அனுமதி மற்றும் இலக்கத்தகடு இல்லாத உழவு இயந்திரத்தில் மதுபானம் ஏற்றப்பட்டதுஇந்நிலையில் பொலிஸாரால் வாகனத்துடன் மதுபானம் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. துறைமுகப் பகுதியில் மதுபானம் இறக்கப்பட்ட நிலையில்இ தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக நெடுந்தீவில் நின்ற யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் இதனை நேரடியாக அவதானித்து சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தார்பின்னர் நிலைமையினை ஆராய்ந்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. 2025 ஆம் ஆண்டுக்கான மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் இருந்த நிலையில் , அண்மையில் இது தொடர்பாக மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் நெடுந்தீவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்ததுஅதற்கான முடிவு இன்னும் வழங்கப்படாத நிலையில் அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்ட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதனடிப்படையிலேயே குறித்த தனியார் விருந்தகத்திற்கான மதுபானம் இன்றையதினம் எடுத்துவரப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement