• Sep 21 2024

சட்ட ரீதியாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டது - ஜனாதிபதியின் கருத்துக்கு ஆணைக்குழு பதிலடி! SamugamMedia

Tamil nila / Feb 24th 2023, 7:30 am
image

Advertisement

அரசமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்துக்கு அமைய சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.  


தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டுடன், தான் தேர்தல் அறிவிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.


நிதி வழங்கப்படாத பின்புலத்தில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான இறுதித்  தீர்மானத்தை மேற்கொள்வதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (24) கூடவுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.


நாட்டின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சட்டபூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், தேர்தலை நடத்த நிதி இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்ததையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்தத் விடயத்தைத் தெரிவித்தார்.

சட்ட ரீதியாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டது - ஜனாதிபதியின் கருத்துக்கு ஆணைக்குழு பதிலடி SamugamMedia அரசமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்துக்கு அமைய சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டுடன், தான் தேர்தல் அறிவிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.நிதி வழங்கப்படாத பின்புலத்தில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான இறுதித்  தீர்மானத்தை மேற்கொள்வதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (24) கூடவுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.நாட்டின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சட்டபூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், தேர்தலை நடத்த நிதி இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்ததையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்தத் விடயத்தைத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement