• May 11 2024

இலங்கை - இந்தியாவுக்கு இடையில் மின்சார பரிமாற்ற இணைப்பு?

Chithra / Jan 10th 2023, 1:53 pm
image

Advertisement

இரண்டு நாடுகளுக்கிடையிலும் மின்சாரப் பரிமாற்ற இணைப்பை அமைப்பதற்காக இந்தியாவும் இலங்கையும் 'உயர் மட்டத்தில்' இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு திட்டமிடுவதாக இந்திய செய்தித்தளம் ஒன்று கூறியுள்ளது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான 'பவர் கிரிட் கோர்ப்பரேஷன் ஒஃப் இந்தியா' ஏற்கனவே முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான பூர்வாங்க அறிக்கையை தயாரித்துள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், மின்சார பற்றாக்குறையை முடங்கியதன் பின்னணியில் ஆரம்பப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் உள்ள தனது உயர்ஸ்தானிகரத்தின் மூலம் இந்திய அரசாங்கம் தனது முயற்சிகளைத் தொடர்கிறது.

இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் இந்திய உயர்ஸ்தானிகரகத்துடன் தொடர்பில் உள்ளது.

இந்தநிலையில் தற்போது உயர் அரசியல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் கருதுவதாக இந்திய செய்தித்தளம் கூறுகிறது.

எனினும் இது தொடர்பில் இந்திய மத்திய மின்சார அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், புது டில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் மற்றும் பவர் கிரிட் நிறுவனம் ஆகியவற்றின் கருத்துக்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

இலங்கை - இந்தியாவுக்கு இடையில் மின்சார பரிமாற்ற இணைப்பு இரண்டு நாடுகளுக்கிடையிலும் மின்சாரப் பரிமாற்ற இணைப்பை அமைப்பதற்காக இந்தியாவும் இலங்கையும் 'உயர் மட்டத்தில்' இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு திட்டமிடுவதாக இந்திய செய்தித்தளம் ஒன்று கூறியுள்ளது.இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான 'பவர் கிரிட் கோர்ப்பரேஷன் ஒஃப் இந்தியா' ஏற்கனவே முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான பூர்வாங்க அறிக்கையை தயாரித்துள்ளது.கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், மின்சார பற்றாக்குறையை முடங்கியதன் பின்னணியில் ஆரம்பப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.இலங்கையில் உள்ள தனது உயர்ஸ்தானிகரத்தின் மூலம் இந்திய அரசாங்கம் தனது முயற்சிகளைத் தொடர்கிறது.இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் இந்திய உயர்ஸ்தானிகரகத்துடன் தொடர்பில் உள்ளது.இந்தநிலையில் தற்போது உயர் அரசியல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் கருதுவதாக இந்திய செய்தித்தளம் கூறுகிறது.எனினும் இது தொடர்பில் இந்திய மத்திய மின்சார அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், புது டில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் மற்றும் பவர் கிரிட் நிறுவனம் ஆகியவற்றின் கருத்துக்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement