புத்தளம் கல்லடி 6ம் கட்டைப் பகுதியில் நேற்று(21) மாலை காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதி வலுக் கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்கூண்டு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த காட்டு யானை சுமார் 8 அடி உயரம் எனவும் 30 வயது மதிக்கக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதன்போது இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு புத்தள நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்த நிலையில் எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றுமொருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
நிகவரெட்டிய மிருக சிகிச்சைப் பிரிவினர் குறித்த பகுதிக்கு இன்று நண்பகல் வருகை தந்து உயிரிழந்த யானையை பிரேத பரிசோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த யானை மின்சார வேலியில் சிக்கூண்டு உயிரிழந்துள்ளதாக மிருக வைத்தியர் இசுரு உறுதிப்படுத்தியுள்ளார்.
மின்சார வேலியில் சிக்குண்ட யானை உயிரிழப்பு. புத்தளத்தில் சம்பவம்.samugammedia புத்தளம் கல்லடி 6ம் கட்டைப் பகுதியில் நேற்று(21) மாலை காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.குறித்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதி வலுக் கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்கூண்டு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்த காட்டு யானை சுமார் 8 அடி உயரம் எனவும் 30 வயது மதிக்கக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.இதன்போது இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு புத்தள நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இதன்போது ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்த நிலையில் எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றுமொருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர். நிகவரெட்டிய மிருக சிகிச்சைப் பிரிவினர் குறித்த பகுதிக்கு இன்று நண்பகல் வருகை தந்து உயிரிழந்த யானையை பிரேத பரிசோதனைக்குட்படுத்தியுள்ளனர்.இதன்போது குறித்த யானை மின்சார வேலியில் சிக்கூண்டு உயிரிழந்துள்ளதாக மிருக வைத்தியர் இசுரு உறுதிப்படுத்தியுள்ளார்.