• Nov 06 2024

டொனால்ட் ட்ரம்பிற்கு தேர்தல் நன்கொடையாக 45 மில்லியன் டொலர் வழங்கவுள்ள எலான் மஸ்க்!

Tamil nila / Jul 16th 2024, 6:36 pm
image

Advertisement

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு தேர்தல் நிதியாக 45 மில்லியன் டொலர் எலான் மஸ்க் வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக் அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்கவுள்ளதாக முதலில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.இருப்பினும் மறைமுகமாக ட்ரம்புக்கு ஆதராவாக அமெரிக்க தொழிலதிபர்களுடன் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சனிக்கிழமை ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுட்டுக்கு பிறகு வெளிப்படையாக மஸ்க் ஆரதவை அறிவித்தார்.

இந்த நிலையில் ட்ரம்புக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் சூப்பர் பிஏசி நிறுவனத்திடம் 45 மில்லியன் டொலர் நிதி வழங்க உறுதி அளித்துள்ளதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜனரல்’ திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் மற்றொரு அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி தொழிலதிபர்கள் ஷான் மாகுவோர், ஜான் ஹெரிங் ஆகியோர் தலா 5 லட்சம் டொலர்கள், கேமரூன் மற்றும் டைலர் விங்க்லெவோஸ் தலா 2.5 லட்டம் டொலர்கள் நன்கொடை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ட்ரம்புக்காக யாரிடமிருந்து எவ்வளவு நிதி பெறப்பட்டுள்ளது என்ற விவரத்தை சூப்பர் பிஏசி நிறுவனம் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

வரும் நவம்பர் 5ம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல்நடேபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அந்நாட்டின் தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில், அவர் காது பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சம்பவத்திற்கு பிறகு ட்ரம்புக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

டொனால்ட் ட்ரம்பிற்கு தேர்தல் நன்கொடையாக 45 மில்லியன் டொலர் வழங்கவுள்ள எலான் மஸ்க் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு தேர்தல் நிதியாக 45 மில்லியன் டொலர் எலான் மஸ்க் வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக் அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்கவுள்ளதாக முதலில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.இருப்பினும் மறைமுகமாக ட்ரம்புக்கு ஆதராவாக அமெரிக்க தொழிலதிபர்களுடன் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சனிக்கிழமை ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுட்டுக்கு பிறகு வெளிப்படையாக மஸ்க் ஆரதவை அறிவித்தார்.இந்த நிலையில் ட்ரம்புக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் சூப்பர் பிஏசி நிறுவனத்திடம் 45 மில்லியன் டொலர் நிதி வழங்க உறுதி அளித்துள்ளதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜனரல்’ திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.மேலும் மற்றொரு அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி தொழிலதிபர்கள் ஷான் மாகுவோர், ஜான் ஹெரிங் ஆகியோர் தலா 5 லட்சம் டொலர்கள், கேமரூன் மற்றும் டைலர் விங்க்லெவோஸ் தலா 2.5 லட்டம் டொலர்கள் நன்கொடை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே ட்ரம்புக்காக யாரிடமிருந்து எவ்வளவு நிதி பெறப்பட்டுள்ளது என்ற விவரத்தை சூப்பர் பிஏசி நிறுவனம் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.வரும் நவம்பர் 5ம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல்நடேபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அந்நாட்டின் தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில், அவர் காது பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சம்பவத்திற்கு பிறகு ட்ரம்புக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Advertisement

Advertisement

Advertisement