• Nov 21 2024

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-பிரச்சார நடவடிக்கைகள் நள்ளிரவுடன் நிறைவுக்கு..!

Sharmi / Oct 23rd 2024, 9:12 am
image

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் இன்று(23) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட இறுதி அரசியல் பிரசாரக் கூட்டங்களின் வீடியோ காட்சிகளையும் விபரங்களையும் 24 ஆம் திகதியன்று ஒவ்வோர் தொலைக்காட்சி, வானொலி அலைவரிசையின் ஒரு பிரதான செய்தியறிக்கையில் மாத்திரம் பிரசாரம் செய்வதற்கும், 25 ஆம் திகதி வெளியாகும் செய்தித்தாள்களில் புகைப்படங்களையும் கூட்டங்கள் பற்றிய குறிப்புகளையும் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரசார நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படும் காலப்பகுதியினுள் எல்பிட்டிய உள்ளூர் அதிகார சபை அதிகார இடப்பரப்பினுள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்கள், குழுக்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-பிரச்சார நடவடிக்கைகள் நள்ளிரவுடன் நிறைவுக்கு. எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் இன்று(23) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதன்படி, இன்று எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட இறுதி அரசியல் பிரசாரக் கூட்டங்களின் வீடியோ காட்சிகளையும் விபரங்களையும் 24 ஆம் திகதியன்று ஒவ்வோர் தொலைக்காட்சி, வானொலி அலைவரிசையின் ஒரு பிரதான செய்தியறிக்கையில் மாத்திரம் பிரசாரம் செய்வதற்கும், 25 ஆம் திகதி வெளியாகும் செய்தித்தாள்களில் புகைப்படங்களையும் கூட்டங்கள் பற்றிய குறிப்புகளையும் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.பிரசார நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படும் காலப்பகுதியினுள் எல்பிட்டிய உள்ளூர் அதிகார சபை அதிகார இடப்பரப்பினுள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்கள், குழுக்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அந்தவகையில் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement