தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்த நாட்டின் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான அதிகாரம் கிடையாது.
மாற்றம் செய்ய வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகும் முன் இந்த அரசாங்கத்தை கவிழ்த்து நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அநுர அரசை கவிழ்த்து நாமலை ஜனாதிபதியாக்குவோம் சஞ்சீவ எதிரிமான்ன சூளுரை தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.அண்மையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்த நாட்டின் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான அதிகாரம் கிடையாது.மாற்றம் செய்ய வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகும் முன் இந்த அரசாங்கத்தை கவிழ்த்து நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.