• May 14 2025

உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிலையியல் குழுக்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

Chithra / May 14th 2025, 10:20 am
image

 

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் மாகாண ஆளுநர்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிலையியல் குழுக்களை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை தாமதமின்றி வெளியிடுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கருஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகெங்கிலும் உள்ள பிரதிநிதித்துவ அமைப்புகளில் முக்கிய பிரிவுகளாக இருக்கின்ற விடயம் நிலையியல் குழுக்களை நிறுவுவதாகும். இதுதொரு மிக முக்கியமான நடைமுறையுமாகும். 

இலங்கையில் உள்ளூராட்சி தொடர்பான சட்டங்கள் நிலைக்குழுக்களுக்கான ஏற்பாடுகளைச் செய்தாலும், அவற்றின் உருவாக்கம் மற்றும் செயற்பாடு குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் அவற்றில் இல்லை.

துரதிர்ஷ்டவசமாக, 2017 முதல் செயலற்ற தன்மை காரணமாக குறித்த குழுக்களின் முன்னேற்றம் தேக்கமடைந்துள்ளன.

இந்த நீண்டகால தாமதம் மேலும் தொடரக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றோம்.  

மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்குப் பொருந்தக்கூடிய துணைச் சட்டங்களைக் கொண்ட வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் நிலையியல் குழுக்களை உடனடியாக நிறுவ வேண்டும்.

மேலும், கணினி கட்டமைப்புகள் மீண்டும் செயற்படுத்தப்படும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. முந்தைய வரைவுகளின் அடிப்படையில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தயாரித்த மாதிரி துணைச் சட்டம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்றார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிலையியல் குழுக்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் மாகாண ஆளுநர்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிலையியல் குழுக்களை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை தாமதமின்றி வெளியிடுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கருஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.இவ்விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,உலகெங்கிலும் உள்ள பிரதிநிதித்துவ அமைப்புகளில் முக்கிய பிரிவுகளாக இருக்கின்ற விடயம் நிலையியல் குழுக்களை நிறுவுவதாகும். இதுதொரு மிக முக்கியமான நடைமுறையுமாகும். இலங்கையில் உள்ளூராட்சி தொடர்பான சட்டங்கள் நிலைக்குழுக்களுக்கான ஏற்பாடுகளைச் செய்தாலும், அவற்றின் உருவாக்கம் மற்றும் செயற்பாடு குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் அவற்றில் இல்லை.துரதிர்ஷ்டவசமாக, 2017 முதல் செயலற்ற தன்மை காரணமாக குறித்த குழுக்களின் முன்னேற்றம் தேக்கமடைந்துள்ளன.இந்த நீண்டகால தாமதம் மேலும் தொடரக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றோம்.  மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்குப் பொருந்தக்கூடிய துணைச் சட்டங்களைக் கொண்ட வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் நிலையியல் குழுக்களை உடனடியாக நிறுவ வேண்டும்.மேலும், கணினி கட்டமைப்புகள் மீண்டும் செயற்படுத்தப்படும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. முந்தைய வரைவுகளின் அடிப்படையில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தயாரித்த மாதிரி துணைச் சட்டம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement