• Nov 23 2024

இலங்கையில் வங்கி அட்டை பாவனையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

Chithra / Jul 19th 2024, 9:43 pm
image

  

இலங்கையிலுள்ள பெரும்பான்மையான மக்கள் தமது வங்கி அட்டையின் கடவுச்சொல் மற்றும் வங்கிக் கணக்கு தரவுகளின் பாதுகாப்பு தொடர்பில் அறிந்திருக்கவில்லை என  Lanka Pay தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் நிறுவப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் தொடர்ந்து பல்வேறு மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க நேரிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதி மோசடிகளில் சிக்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது வங்கிக் கணக்குத் தகவல்களை மிக இலகுவாக வெளி தரப்பினருக்கு வழங்கியுள்ளனர்.

இதன் காரணமாகவே நிதி மோசடிகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வங்கி கணக்கு தகவல் மற்றும் இரகசிய எண்களை கூட பரிமாறி நிதி மோசடிக்குள்ளானவர்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வங்கி அட்டை பாவனையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை   இலங்கையிலுள்ள பெரும்பான்மையான மக்கள் தமது வங்கி அட்டையின் கடவுச்சொல் மற்றும் வங்கிக் கணக்கு தரவுகளின் பாதுகாப்பு தொடர்பில் அறிந்திருக்கவில்லை என  Lanka Pay தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் நிறுவப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.இதன் காரணமாக மக்கள் தொடர்ந்து பல்வேறு மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க நேரிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நிதி மோசடிகளில் சிக்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது வங்கிக் கணக்குத் தகவல்களை மிக இலகுவாக வெளி தரப்பினருக்கு வழங்கியுள்ளனர்.இதன் காரணமாகவே நிதி மோசடிகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகிறது.பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வங்கி கணக்கு தகவல் மற்றும் இரகசிய எண்களை கூட பரிமாறி நிதி மோசடிக்குள்ளானவர்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement