• Jul 05 2025

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுமியின் ஆடை; இதுவரை 42 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

Chithra / Jul 4th 2025, 7:15 pm
image


செம்மணி மனித புதைகுழியில் இன்றும் சில மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், இதுவரையில் 42 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் ஒன்பதாம் நாள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

அகழ்வுப் பணி இரண்டு பிரிவுகளாக நடைபெற்று கொண்டிருப்பதாகவும் சந்தேகத்திற்கிடமான பகுதியிலும் அகழ்வுப் பணி நடைபெற்றது. 

புதிதாக அகழப்பட்ட பகுதியில் சிறுமி ஒருவரின் ஆடையும் இன்றும் மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளையும் அகழ்வுப் பணிநடைபெறும் என தெரிவித்தார்.  

 


செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுமியின் ஆடை; இதுவரை 42 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் செம்மணி மனித புதைகுழியில் இன்றும் சில மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், இதுவரையில் 42 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் ஒன்பதாம் நாள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.அகழ்வுப் பணி இரண்டு பிரிவுகளாக நடைபெற்று கொண்டிருப்பதாகவும் சந்தேகத்திற்கிடமான பகுதியிலும் அகழ்வுப் பணி நடைபெற்றது. புதிதாக அகழப்பட்ட பகுதியில் சிறுமி ஒருவரின் ஆடையும் இன்றும் மீட்கப்பட்டுள்ளது.தொடர்ந்து நாளையும் அகழ்வுப் பணிநடைபெறும் என தெரிவித்தார்.   

Advertisement

Advertisement

Advertisement