• Jul 05 2025

மானியங்கள் பெற வேண்டிய மக்களை துல்லியமாக அடையாளம் காண ஒரு சிறந்த தரவு முறை! ஜனாதிபதி தெரிவிப்பு

Chithra / Jul 4th 2025, 7:57 pm
image



கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்துவது தற்போதைய அரசின் முக்கிய பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

‘சமூக சக்தி’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இலக்கு வைக்கப்பட்ட சமூகங்களுக்கு மானியங்களை முறையாக வழங்குவது தேசிய மக்கள் சக்தி அரசின் கொள்கையாகும். 

அதன்படி, கிராமப்புற வறுமையை ஒழிப்பது அவசியமானது 

இதற்காக ஏராளமான முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு தேவையான பல காரணிகள் கணிசமான அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

மானியங்கள் பெற வேண்டிய மக்களை துல்லியமாக அடையாளம் காண ஒரு சிறந்த தரவு முறைமை தேவை அதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு மானியங்கள் சரியான முறையில் வழங்கப்பட முடியும் எனவும், இதற்கு அரசு அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார். 

கிராமப்புற மக்களுக்கு உதவி வழங்கும் அனைத்து வேலைத்திட்டங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும், இந்தப் பணியை முறையாக செய்ய ‘பிரஜாசக்தி’ வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


மானியங்கள் பெற வேண்டிய மக்களை துல்லியமாக அடையாளம் காண ஒரு சிறந்த தரவு முறை ஜனாதிபதி தெரிவிப்பு கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்துவது தற்போதைய அரசின் முக்கிய பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ‘சமூக சக்தி’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இலக்கு வைக்கப்பட்ட சமூகங்களுக்கு மானியங்களை முறையாக வழங்குவது தேசிய மக்கள் சக்தி அரசின் கொள்கையாகும். அதன்படி, கிராமப்புற வறுமையை ஒழிப்பது அவசியமானது இதற்காக ஏராளமான முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு தேவையான பல காரணிகள் கணிசமான அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மானியங்கள் பெற வேண்டிய மக்களை துல்லியமாக அடையாளம் காண ஒரு சிறந்த தரவு முறைமை தேவை அதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு மானியங்கள் சரியான முறையில் வழங்கப்பட முடியும் எனவும், இதற்கு அரசு அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார். கிராமப்புற மக்களுக்கு உதவி வழங்கும் அனைத்து வேலைத்திட்டங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும், இந்தப் பணியை முறையாக செய்ய ‘பிரஜாசக்தி’ வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement