• Nov 19 2024

ஷான்ஷன் புயல் குறித்து அவசர எச்சரிக்கை! இடைநிறுத்தப்பட்ட முக்கிய சேவைகள்

Chithra / Aug 28th 2024, 3:05 pm
image


ஷன்ஷான் புயல் குறித்து ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த புயல் தற்போது ஜப்பானின் அமாமி ஓஷிமா தீவுக்கு அருகில் கடல் வழியாக நகர்வதாகவும், அது இவ்வார இறுதியில் மிகவும் வலுவான புயலாக உருவாகலாம் எனவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன் கியூஷு மற்றும் அமாமி ஆகிய பகுதிகளில் மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஜப்பானின் சில பகுதிகளில் 300 முதல் 400 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷான்ஷன் புயல் குறித்து அவசர எச்சரிக்கை இடைநிறுத்தப்பட்ட முக்கிய சேவைகள் ஷன்ஷான் புயல் குறித்து ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த புயல் தற்போது ஜப்பானின் அமாமி ஓஷிமா தீவுக்கு அருகில் கடல் வழியாக நகர்வதாகவும், அது இவ்வார இறுதியில் மிகவும் வலுவான புயலாக உருவாகலாம் எனவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் கியூஷு மற்றும் அமாமி ஆகிய பகுதிகளில் மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஜப்பானின் சில பகுதிகளில் 300 முதல் 400 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.இந்த நிலையில் குறித்த பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement