• Nov 07 2025

பணம் கொடுத்து சீசன் டிக்கெட் பெற்றும் பேருந்தில் பயணிக்க முடியாத நிலை! கிளிநொச்சியில் வீதியில் நிற்கும் மாணவர்கள்

Chithra / Oct 9th 2025, 8:30 am
image


தொலைதூரத்திலிருந்து கல்விக்காக கிளிநொச்சி வரும் மாணவர்களுக்கு சீசன் டிக்கெட் வழங்கப்பட்ட  போதிலும் அரச பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை என மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மாலை 5.30 மணிக்கு தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகள் முடிவடைந்தாலும் அரச பேருந்துகளில்  மாணவர்களை ஏற்றுவதில்லை என மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

அயல்  மாவட்டங்களிலிருந்து கிளிநொச்சியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு மேலதிக கல்விக்காக வருகின்ற போதும் திரும்பி செல்கின்ற போதும், சீசன் டிக்கெட் வழங்கப்பட்ட  போதிலும் அரச பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை.

குறிப்பாக மாங்குளம் பகுதியில் இருந்து வருகின்ற மாணவர்கள் தங்களின் கல்வியை சரியான முறையில் தொடரமுடியாமல் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.        

மாங்குளம் பகுதியில் இருந்து மேலதிக கல்விக்காக கிளிநொச்சிக்கு செல்வதற்கு பணம் கொடுத்து சீசன் டிக்கெட் பெற்றுக் கொண்டாலும் பேருந்தில் பயணிக்க முடியாத நிலை பாடசாலை மாணவர்களுக்கு காணப்படுவதாக கூறப்படுகின்றது. 


பணம் கொடுத்து சீசன் டிக்கெட் பெற்றும் பேருந்தில் பயணிக்க முடியாத நிலை கிளிநொச்சியில் வீதியில் நிற்கும் மாணவர்கள் தொலைதூரத்திலிருந்து கல்விக்காக கிளிநொச்சி வரும் மாணவர்களுக்கு சீசன் டிக்கெட் வழங்கப்பட்ட  போதிலும் அரச பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை என மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.மாலை 5.30 மணிக்கு தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகள் முடிவடைந்தாலும் அரச பேருந்துகளில்  மாணவர்களை ஏற்றுவதில்லை என மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.அயல்  மாவட்டங்களிலிருந்து கிளிநொச்சியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு மேலதிக கல்விக்காக வருகின்ற போதும் திரும்பி செல்கின்ற போதும், சீசன் டிக்கெட் வழங்கப்பட்ட  போதிலும் அரச பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை.குறிப்பாக மாங்குளம் பகுதியில் இருந்து வருகின்ற மாணவர்கள் தங்களின் கல்வியை சரியான முறையில் தொடரமுடியாமல் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.        மாங்குளம் பகுதியில் இருந்து மேலதிக கல்விக்காக கிளிநொச்சிக்கு செல்வதற்கு பணம் கொடுத்து சீசன் டிக்கெட் பெற்றுக் கொண்டாலும் பேருந்தில் பயணிக்க முடியாத நிலை பாடசாலை மாணவர்களுக்கு காணப்படுவதாக கூறப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement