• Sep 17 2024

சஜித் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு லீட்டர் பெட்ரோல் 150 ரூபாவிற்கு வழங்க முடியாது! ஹர்ஷ திட்டவட்டம்

Chithra / Aug 14th 2024, 8:44 am
image

Advertisement

 

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் ஒரு லீட்டர் பெட்ரோலை 150 ரூபாவிற்கு வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் 150 ரூபாவிற்கு பெட்ரோல் வழங்க முடியும் என பிரசாரம் செய்து வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற போதிலும் அது நடைமுறைச் சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வழங்கினாலும் சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது 24 மணித்தியாலங்களும் மின்சாரம் வழங்கப்படுவதாகவும், எரிபொருளுக்கு வரிசையில் நிற்க வேண்டியதில்லை எனவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 

சஜித் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு லீட்டர் பெட்ரோல் 150 ரூபாவிற்கு வழங்க முடியாது ஹர்ஷ திட்டவட்டம்  சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் ஒரு லீட்டர் பெட்ரோலை 150 ரூபாவிற்கு வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் 150 ரூபாவிற்கு பெட்ரோல் வழங்க முடியும் என பிரசாரம் செய்து வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற போதிலும் அது நடைமுறைச் சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார்.அவ்வாறு வழங்கினாலும் சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.தற்பொழுது 24 மணித்தியாலங்களும் மின்சாரம் வழங்கப்படுவதாகவும், எரிபொருளுக்கு வரிசையில் நிற்க வேண்டியதில்லை எனவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement