2024ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக நாட்டு மக்கள் எடுத்த தவறான தீர்மானத்தைத் திருத்திக் கொள்ள அவர்கள் தயாராகி வருவதாகவும், நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் 2029ஆம் ஆண்டு அவரை ஜனாதிபதியாக்குவோம் எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் நேற்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக செயற்படுவதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கம், அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி ஜனநாயகத்திற்கு விரோதமான வகையில் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.
அரசியல் பழிவாங்கலுக்காகவே நீதிபதிகளின் பதவிக்காலம் முறையற்ற வகையில் நீட்டிக்கப்படுவதாகவும், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான மறுசீரமைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே நீதிபதிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் சாந்த பண்டார குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சிக்கும் தரப்பினர் தற்போது இலக்கு வைக்கப்பட்டு கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தவர்களில் பலர் தற்போது தம்முடன் இணைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 2029ஆம் ஆண்டு நிச்சயமாக அதிகாரத்தை கைப்பற்றுவோம் எனவும் சாந்த பண்டார நம்பிக்கை வெளியிட்டார்.
நாமலை சிறையில் அடைத்தாலும் அவரை ஜனாதிபதியாக்குவோம் - சாந்த பண்டார முழக்கம் 2024ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக நாட்டு மக்கள் எடுத்த தவறான தீர்மானத்தைத் திருத்திக் கொள்ள அவர்கள் தயாராகி வருவதாகவும், நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் 2029ஆம் ஆண்டு அவரை ஜனாதிபதியாக்குவோம் எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.அநுராதபுரம் பகுதியில் நேற்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.ஊழலுக்கு எதிராக செயற்படுவதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கம், அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி ஜனநாயகத்திற்கு விரோதமான வகையில் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.அரசியல் பழிவாங்கலுக்காகவே நீதிபதிகளின் பதவிக்காலம் முறையற்ற வகையில் நீட்டிக்கப்படுவதாகவும், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான மறுசீரமைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே நீதிபதிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் சாந்த பண்டார குறிப்பிட்டார்.அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சிக்கும் தரப்பினர் தற்போது இலக்கு வைக்கப்பட்டு கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தவர்களில் பலர் தற்போது தம்முடன் இணைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.எதிர்வரும் 2029ஆம் ஆண்டு நிச்சயமாக அதிகாரத்தை கைப்பற்றுவோம் எனவும் சாந்த பண்டார நம்பிக்கை வெளியிட்டார்.