• Apr 19 2026

கிளிநொச்சியில் விவசாயிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு!

Ziya / Jan 28th 2026, 5:27 pm
image

விவசாயிகளின் தானியக்களஞ்சியங்களை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 15 விவசாயிகளுக்கு 45000 ரூபா பெறுமதியான காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.


குறித்த நிகழ்வு தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் ஏற்பாட்டில்  கனகாம்பிகைக்குளம் நெல் களஞ்சிய சாலை அலுவலகத்தில் நடைபெற்றது. 


தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் மாவட்ட உத்தியோகத்தர் என்.சோமகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்   தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ரோகித பிரசாந்த கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலையை வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன், தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.





கிளிநொச்சியில் விவசாயிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு விவசாயிகளின் தானியக்களஞ்சியங்களை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 15 விவசாயிகளுக்கு 45000 ரூபா பெறுமதியான காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.குறித்த நிகழ்வு தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் ஏற்பாட்டில்  கனகாம்பிகைக்குளம் நெல் களஞ்சிய சாலை அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் மாவட்ட உத்தியோகத்தர் என்.சோமகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்   தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ரோகித பிரசாந்த கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலையை வழங்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன், தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement