• Mar 17 2026

ஐசிசி ஒருநாள் தரவரிசை: இலங்கை அணி 6ஆவது இடத்திற்கு சரிவு!

Ziya / Jan 28th 2026, 5:39 pm
image

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.


கொழும்பில் நேற்று (27) நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் இழந்ததன் விளைவாக, இதுவரை 5ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி தரவரிசையில் ஒரு இடம் பின்னடைவை சந்தித்துள்ளது.


இங்கிலாந்து அணி தொடர்ந்தும் 8ஆவது இடத்திலேயே நீடிக்கிறது. 


அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான் அணி 7ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.


இங்கிலாந்து அணிக்கான இந்த தொடர் வெற்றி, 2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்த அணி தனது சொந்த மண்ணுக்கு வெளியே பெற்ற முதலாவது ஒருநாள் தொடர் வெற்றியாக குறிப்பிடப்படுகிறது.


இந்தத் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் நியூசிலாந்தும், மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ள அதேவேளை, பாகிஸ்தான் அணி 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.




ஐசிசி ஒருநாள் தரவரிசை: இலங்கை அணி 6ஆவது இடத்திற்கு சரிவு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.கொழும்பில் நேற்று (27) நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் இழந்ததன் விளைவாக, இதுவரை 5ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி தரவரிசையில் ஒரு இடம் பின்னடைவை சந்தித்துள்ளது.இங்கிலாந்து அணி தொடர்ந்தும் 8ஆவது இடத்திலேயே நீடிக்கிறது. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான் அணி 7ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.இங்கிலாந்து அணிக்கான இந்த தொடர் வெற்றி, 2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்த அணி தனது சொந்த மண்ணுக்கு வெளியே பெற்ற முதலாவது ஒருநாள் தொடர் வெற்றியாக குறிப்பிடப்படுகிறது.இந்தத் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் நியூசிலாந்தும், மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ள அதேவேளை, பாகிஸ்தான் அணி 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement